31 March 2011

மனதில் வை.......

    அறிவுக்கு உயிர் தந்த 
    ஆசிரியரை மறவாதே.
    இன்றும் என்றும் 
    ஈன்றெடுத்த தாயை மறவாதே.
    உன்னை தினமும் 
    ஊக்குவித்த உடன்பிறப்பை மறவாதே.
    என்றும் உன் இலட்சிய 
    ஏக்கங்களை மறவாதே.
    ஐம்புலன்களை 
    ஒருமையுடன் வைக்க மறவாதே.
    ஓதிய கருத்துக்களை 
    ஔவையாரின் பாடலுடன் ஒப்புமைப்படுத்த
                             மறவாதே. 
    அஃதிலை என்றால் உலகம் உன்னை மறந்துவிடும். 

30 March 2011

விட்டு விடுதலையாகி

விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியினைப் போலே

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவோடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி என்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு...)

பெட்டையோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையில்லாதோர் கூடு கட்டிக் கொண்டு
முட்டை தருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு...)

முற்றத்திலேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப் பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு...)

WELCOME TO SJK (T) LADANG SELINSING