அறிவுக்கு உயிர் தந்த
ஆசிரியரை மறவாதே.
இன்றும் என்றும்
ஈன்றெடுத்த தாயை மறவாதே.
உன்னை தினமும்
ஊக்குவித்த உடன்பிறப்பை மறவாதே.
என்றும் உன் இலட்சிய
ஏக்கங்களை மறவாதே.
ஐம்புலன்களை
ஒருமையுடன் வைக்க மறவாதே.
ஓதிய கருத்துக்களை
ஔவையாரின் பாடலுடன் ஒப்புமைப்படுத்த
மறவாதே.
அஃதிலை என்றால் உலகம் உன்னை மறந்துவிடும்.